நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்புகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 16,630ஆக அதிகரித்துள்ளது.