நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
இத்தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக 2012ஆம் ஆண்டு நீர் கட்டணம் திருத்தப்பட்டது.
அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக நீர் உற்பத்திகான செலவு அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டு இவ்வாறு கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய, தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வணிக ரீதியான நீர் விநியோகத்துக்கு அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, தற்போது அறவிடப்படும் சேவை கட்டணத்தை 50 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
