மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

நாளை 16ம் திகதி முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பிரிவுகளுக்கு பகல் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பு இடம்பெறும்

CC வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், M,N,O,X,Y,Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.