வாகன டாஷ்போர்ட் கமராவில் பதிவான தாக்குதல் சம்பவம்

புனித யாத்திரை ஒன்றை முடித்து வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வாகனத்தின் மீது வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் திடீரென தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது

எனினும், குறித்த வாகனத்தின் மீதான தாக்குதல் சம்பவம் வாகனத்தின் டேஷ்போர்டு கமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.