
காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு
காணாமல் போன இளைஞனின் சடலம் தலகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பம்பரகெலே தோட்டத்தில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சசிதரன் (வயது 22) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இளைஞன் ஒருவர் காணாமல் போனதாக இளைஞனின் உறவினர்கள் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தலகல நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன இளைஞனின் சடலம் என உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
