மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை

மின் கட்டண உயர்வால் தென்னை நார் ஆலைகளை நடத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தென்னை நார் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சார கட்டணம் உயர்வடைந்துள்ளதால் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், தொடர்ந்தும் தமது தொழிலை முன்னெடுத்து செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், தென்மாகாண கயிறு மற்றும் தென்னை நார் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தம்மிக்க சுஜித் குமார தெரிவித்துள்ளார்.