நாட்டில் மேலும் 5 கொவிட் இறப்புகள்
நாட்டில் மேலும் 5 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,619 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சனிக்கிழமை பதிவான இறப்புகளில், 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குகின்றனர்.
இலங்கையில் இதுவரை 667,735 பேர் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 962 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
650,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
