க்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியீடு

க்ளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் க்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி 2017 நவம்பர் 9 ஆம் திகதி வெளியான 2044ஃ40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியினால் க்ளைபோசேட் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை, இந்த வர்த்தமானியினால் நீக்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிப் பதிவாளரின் பரிந்துரையின் பேரில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் க்ளைபோசேட்டை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு க்ளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.