ஜனாதிபதி நிதியத்தால் உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே, ஒரு சில விண்ணப்பங்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு நாட்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

இதன்படி, மீண்டும் உதவித் தொகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இருதய சத்திரசிகிச்சை, சிறுநீரக மாற்று, கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை போன்ற தீவிர நோய்களுக்கான சத்திரசிகிச்சைகளுக்காக செலவிடப்படும் பணத்தின் ஒரு பகுதியை ஜனாதிபதி நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.