உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நடைமுறைப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த மூன்று நாட்களைத் தவிர, வேறு எந்த நாளும் அதற்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.