
காலி முகத்திடல் போராட்ட களத்தில் அனைத்து கூடாரங்களும் அகற்றப்பட்டது
காலி முகத்திடல் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளன.
பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் இன்று பிற்பகல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் மைதானத்தை விட்டு முழுமையாக வெளியேறப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
