யானை-மனிதன் முரண்பாடு காரணமாக வருடாந்தம் 300 யானைகளும் 100 மனிதர்களும் உயிரிழப்பு
-கல்முனை நிருபர்-
சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இவ் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில் சுமார் 6 ஆயிரம் யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து வீதமானவை ஆண்யானைகளாகும்.
வருடாந்தம் யானை மனிதன் முரண்பாடு காரணமாக 300 யானைகள் இறப்பதாகவும், 100 மனிதர்கள் உயிரிழப்பதாகவும் வனவிலங்கு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யானை ஒன்று நாள் ஒன்றுக்கு 200 kg உணவை உட்கொள்கிறது. அதன் சாணம் பல மரக்கன்றுகளை உருவாக்குகிறது.
ஒரு யானை சராசரி 80 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. ஒரு யானை 5 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் நீர்நிலையை அறியக்கூடிய வல்லமை மிக்கதாகும்.
சர்வதேச யானைகள் தினமான இன்று யானை – மனிதன் முரண்பாடு இல்லாத சமுகத்தை உருவாக்குவதுடன், அருகிவரும் யானை இனங்களை பாதுகாப்போம்
