முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை தாய்லாந்து செல்வார்?

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக , தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனி சங்கரட் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தங்கியிருக்க மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டில் நுழைவதில் எந்தப் பிரச்சினையையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே எப்போது வருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.