பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக : தேசிய போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கும்,  தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன் தேசிய போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து , அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் தே.போ. ஊழியர்களை தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்த தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தினால் நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு ஆணைக்குழு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.பேமசிறிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.