கொவிட் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழப்பு
நேற்று திங்கட்கிழமை மேலும் 06 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 6 பேரில் 5 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் மூன்று பேர் ஆண்கள் என்றும் எஞ்சிய இருவர் பெண்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 6 பேரில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் ஒருவரும் அடங்குகின்றார்.
