மரக்கறிகள் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளின்படி மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரு கிலோ பீன்ஸ் 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, கேரட், முட்டைகோஸ், தக்காளி, கத்தரி போன்ற ஒரு கிலோ காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

அத்துடன், மத்திய வங்கியின் தினசரி அறிக்கையின்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலையும் 700 ரூபாவாக அதிகரித்துள்ளது.