கடற்தொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட சந்திப்பு

-யாழ் நிருபர்-

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை நியாயமான விலையில் எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் மண்ணெண்ணையை இறக்குமதி செய்வதில் காணப்படும் சவால்களையும் தெளிவுபடுத்தினார்.

இதனையடுத்து, ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகிய மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடி, குறித்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.