நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய நால்வர் கைது

-யாழ் நிருபர்-

யாழ். தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸார் மீட்டுள்ளதுடன், 04 பேரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுவன் பகுதியில் நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை இவ்வாறு திருடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.