ஜே.வி.பி நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜே.வி.பி நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

காலவரையறையின்றிய ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை என ஏற்கனவே தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளோம்.

இருப்பினும், சகல கட்சிகளுக்கும் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பினை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.