வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 48,777 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கண்டி, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 11,437 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இம்மாதம் இதுவரை 1,916 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.