
குரங்கு அம்மை தொற்று பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்
நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை கருவிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட உள்ளன.
