விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் முறிவு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற மகேந்திரா வாகனம் வீதியை விட்டு பிழையான பக்கத்திற்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் தனது வீட்டின் படலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டு படலையினை திறந்துகொண்டு இருக்கும்போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் இளைஞரின் ஒரு கால் முற்றாக முறிந்துள்ளதுடன் மற்றைய காலும் சேதமடைந்துள்ளது.

அத்துடன் இளைஞரின் மோட்டார் சைக்கிள் முற்றாகவே சேதமடைந்துள்ளது.

1990 என்னும் அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வாகனத்தின் சாரதியை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.