
இலங்கையர்கள் மேலும் பலரை காணவில்லை
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியைச் சேர்ந்த 10 வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் மூத்த விளையாட்டு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
அவரது அடையாளத்தை வெளியிட விரும்பாத அதிகாரி, 9 வீரர்களும் ஒரு மேலாளரும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஜூடோ வீராங்கனை சமிலா டெலானி, அவரது முகாமையாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மற்ற வீரர்களின் அடையாளத்தை வெளியிடாத விளையாட்டு ஆணையம், அவர்கள் வேலை தேடி இங்கிலாந்தில் தங்க முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
AFP க்கு தகவல் வழங்கிய விளையாட்டு ஆணையம், காணாமல் போன மூன்று பேரின் இருப்பிடத்தை பிரித்தானிய பொலிஸ் அடையாளம் கண்டாலும், அவர்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசாவைக் கொண்டிருப்பதாலும், நாட்டில் எந்த சட்டத்தையும் மீறாததாலும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆனால், அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான தகவலை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 161 விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு இந்த ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
