கார் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து

-மன்னார் நிருபர்-

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது .

அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்த நிலையில் நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின்போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்