எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும்
எரிபொருள் ஒதுக்கீடு இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும் அடுத்த வாரத்திற்கு அது தொடர்ந்தும் இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை தேவைப்பட்டால் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான பெட்ரோல் எரிபொருள் ஒதுக்கீடு 4 லீட்டர் , முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டர், வேன்களுக்கு 20 லீட்டர், கார்களுக்கு 20 லீட்டர், முக்கிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர், ஏனைய தரை வாகனங்களுக்கு 15 லீட்டர், மற்றும் லொரிகளுக்கு 50 லீட்டர் என்ற நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
