
‘கனேமுல்ல சஞ்சீவ’வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது
கம்பஹாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் ‘கனேமுல்ல சஞ்சீவ’வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 30 கிராம் ஹெரோயின், வாள், 7 கைத்தொலைபேசிகள் மற்றும் 120,000 ரூபா என்கன மீட்கப்பட்டுள்ளன.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இந்த கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
