
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு : மகனை கொலை செய்த தாய்
தாயின் கள்ள காதலுக்கு ஆட்சேபம் தெரிவித்த மகனை தனது கள்ளக்காதலன் மற்றும் இளைய மகனை வைத்து தயே கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இந்தியா உத்தரப் பிரதேசத்தின் மோடி நகர் பகுதியைச் சேர்ந்த அனுஜ் குமார் (வயது-27) என்பவரை கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் காணவில்லை என, அவரது மனைவி அஞ்சலி பொலிசில் புகார் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி நிவாரி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் அனுஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த போது அனுஜ் குமாரின் மனைவி அஞ்சலி தனது மாமியாரும் அனுஜ்ஜின் தாயாருமான கிருஷ்ணாதேவி மற்றும் தனது கணவனின் இளைய சகோதரர் அபிஷேக் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அனுஜ்ஜின் தாயார் கிருஷ்ணாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது வந்துள்ளது. இந்த விவகாரம் மூத்த மகன் அனுஜ்ஜிற்கு தெரிய வரவே, தாயாரை அவர் கண்டித்துள்ளார்.
தனது கள்ளக்காதல் விவகாரம் மகனுக்கு தெரியவந்தநிலையில் மகனின் எதிர்ப்பையடுத்து தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து கள்ளக்காதலன் மற்றும் இளைய மகன் ஆகியோரின் உதவியுடன் அனுஜ்ஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தாய் , இளையமகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளக்காதலன் தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதலுக்காக தாயே மகனை கொலை செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
