
ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகள்.
மாத்தறை மாவட்டம் – வஸ்கடுவ பிரதேச செயலக பிரிவு.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு.
கேகாலை மாவட்டம் – யட்டியாந்தோட்டை மற்றும் அரநாயக்க பிரதேச செயலக பிரிவுகள்.
இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, கலவான, கஹவத்தை, குருவிட்ட மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.
