
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிற்கு விளக்கமறியல்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொஸ்வத்தே மஹாநாம தேரருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
