தானிஷ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் விதிமுறைகளை மீறி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தானிஷ் அலி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.