இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைப்பு
இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரி பஸ் கட்டணம் 11.14% குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, QR முறைமைக்கு போதியளவு டீசல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து பல தனியார் பஸ் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர்கள் சங்கம், பொதுஜன ஐக்கிய பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை ஐக்கிய பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
