லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்
கடந்த 22 நாட்களில் 25 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
140,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
