
ரைஸ் குக்கரில் சமைத்த காரணத்தினால் தாயை கொடூரமாக அடித்த மகன்
சோறு சமைப்பதற்கு ரைஸ் குக்கரைப் பயன்படுத்தியதாக தெரிவித்து, வயதான தாயை தாக்கியதாகக் கூறப்படும் மகன் ஒருவர் பேருவளை – மஹாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த 75 வயதுடைய தாய் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகனின் தாக்குதலினால் தாயின் இடுப்பு எலும்புகள் உடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
