
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும், என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்வதால், முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுவதற்கான திகதியை வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கப்பலின் கேப்டன் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டியூட் கார்லோ விட்டலி மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் மூன்று உள்ளூர் ஏஜென்சி இயக்குநர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
