இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது கடமை என நினைத்தேன்

கடனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் பொதியைப் பெறுவதற்கான செயல்முறையை முன்னெடுத்து, இதற்கான கொள்கை வரைவு விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும், என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தில் 3 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், தேசிய பொருளாதார வேலைத்திட்டம் அடுத்த 25 வருடங்களுக்கு ஸ்தாபிக்கப்படும்.

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது, நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம், ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.30ற்கு ஆரம்பமாகியது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன முழு உரை   https://drive.google.com/file/d/14ZZNpdkjQ0AqfDgHxp3MlDYVOMVKzjHP/view