நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும்
தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
