
ரவி கருணாநாயக்க மன்னாரிற்கு திடீர் விஜயம் : திடீர் விஜயத்திற்கான காரணம் மர்மம்
-மன்னார் நிருபர்-
முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார்.
மன்னாரிற்கான திடீர் விஜயம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.
ரவி கருணாநாயக்கவுடன் ரி.எஸ்.எப் (T.S.F) என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வருகை தந்த நிலையில் அவர்களின் வாகனத்திலேயே அவர் அவர்களுடன் சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
