மதுபான விருந்தில் கைகலப்பு : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

உடபுஸ்ஸல்லாவ – ரபனாவத்த பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய ரபனாவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் 21 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரபனாவத்த பிரதேசத்தில் 5 இளைஞர்கள் மதுபான விருந்து நடத்தியிருந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.