
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான டேவிட் ஹொலே தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில் , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த உயர் ஸ்தானிகரை ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றதையடுத்து , இரு உயர் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்ந சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
