நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் 102 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மருந்துகள் கடுமையான நிர்வாகத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க சர்வதேச நிறுவனங்கள் உதவி செய்துள்ளதாகவும், அவர் மேலும் தெரரிவித்துள்ளார்.