ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நான்கு அதிகாரிகளும் விளக்கமறியலில்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை கேகாலை நீதவான் வாசன நவரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 125 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 120 பொதுமக்களின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.