
பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மனன பொடி மல்லி என்றழைக்கப்படும் தலகல விதானகே இந்திக்க துஷார என்ற போதைப்பொருள் வியாபாரியே இன்று வியாழக்கிழமை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் இந்திக்க துஷார ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
