481 எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை
நாட்டிலுள்ள 481 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது இது நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவாகும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
409 சிபெட்கோ நிரப்பு நிலையங்கள் மற்றும் 72 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இதில் அடங்குகின்றன.
ஆகஸ்ட் முதலாம்திகதியிலிருநது நாடு முழுவதும் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று வரை நடைபெற்று முடிந்த தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திர நடவடிக்கையின்படியான எண்ணிக்கையே இதுவாகும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கமைய இதுவரை 158,208 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,296,950 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
