
பல வாகனங்களைக் கொண்ட வரத்தக நிறுவனங்களுக்கான அறிவித்தல்
வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் தேசிய எரிபொருள் விநியோக அட்டைகளுக்காக பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்விட்டர் பதிவில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இயந்திரங்களுக்குரிய வாராந்த எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக தங்களது பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவருடைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
