
ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா பணத்துடன் இளைஞர் ஒருவர் கைது
வெலிகமவில் உண்டியல் முறையில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றிய நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வெலிகம-கல்பொக்க பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தை மாற்றியமைக்காக கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
