துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய ஒருவர் பலி
இரத்மலானை சில்வா மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
