நாட்டின் பல பகுதிகளில் மழை
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்சுமார் 100 மி.மீ கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
