நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,548 ஆகும்.

இதேவேளை, இன்று புதன்கிழமை மேலும் 154 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665இ248. ஆக அதிகரித்துள்ளது.