நீதிமன்றத்திற்கு அருகில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு
கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த “பஸ் பொட்டா” உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைகளுக்காக “பஸ் பொட்டா” உள்ளிட்ட ஆறுவரை பொலிசார் கெப் வண்டியில் அழைத்துச்சென்ற போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றில் வந்தவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
