மீண்டும் திரிபோஷா விநியோக நடவடிக்கை ஆரம்பம்

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா தயாரிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி  திரிபோஷா விநியோக நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, திரிபோஷா தயாரிப்பதற்கான தானியங்களின் தட்டுப்பாடு நிலவியதால் திரிபோஷா தயாரிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.